இன்றைய அரசியலின் மோசமான நிலை----படித்தது

எல்லைகள்


வானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....!







































இந்தியாவின் அரசியல் நிலை குறித்து சற்று கூர்ந்து கவனித்தால் அரசியல் சுய லாபம்.இன்றி,அரசியல்வாதிகளும்,ஆட்சியாளர்களும் இன்று செயல்படுவதில்லை என்ற உண்மை தெரிய வரும்!பொதுமக்களின் நல்வாழ்வுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தும் போது,ஏன் திட்டங்கள் குறித்து அறிவிப்பதில் இருந்தே அரசியல் ஆதாயம் என்ற கண்ணோட்டம் ஆரம்பமாகிவிடுகிறது! ஒரு சுகாதார வளாகம் கட்டுவதாக இருந்தாலும்,சாலைகள்,மேம்பாலங்கள்,பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதில் கூட அரசியல் ஆதாயம் இருக்கிறதா என்று பார்த்தே செய்யப்படுகிறது! அதனால்தான் பிறகு வரும் ஆட்சியாளர்கள் முந்தைய ஆட்சியாளர்களால் தொடங்கப்பட்ட திட்டங்களை கைகழுவி விட்டு விடடு புதிதாக திட்டங்களை தொடங்கும் நிலை ஏற்படுகிறது!

கர்மவீரர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சியை சொல்லவேண்டும்!இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, புதிய ஆணை கட்ட திட்டமிட்டு,பணிகள் தொடங்கப் பட்டது! நிருபர் ஒருவர், "காமராஜரிடம்,அய்யா தாங்கள் பிறந்த மாவட்டமான விருதுநகர் மக்களுக்கு பயன்படுமாறு அணைகட்ட தோன்றவில்லையா?" என்று கேட்டார் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே, புதிய ஆணை கட்ட திட்டமிட்டு,பணிகள் தொடங்கப் பட்டது! நிருபர் ஒருவர், "காமராஜரிடம்,அய்யா தாங்கள் பிறந்த மாவட்டமான விருதுநகர் மக்களுக்கு பயன்படுமாறு அணைகட்ட தோன்றவில்லையா?" என்று கேட்டார்!

காமராஜர், "எனக்கு இங்கே (கிருஷ்ணகிரி பகுதியில்)அணைகட்டுவது முக்கியம் என்று தோன்றியதால்,அணைகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது! நான் பிறந்த விருதுநகர் பகுதியில் அணை கட்ட வேண்டும் என்று... பிறகு யாருக்காவது தோன்றினால், அவர்கள் அங்கே கட்டட்டும்" என்று பதிலளித்தார்!

மக்களுக்கு தேவையான செயல்களை அரசியல் கண்ணோட்டம் இன்றி பொதுநல நோக்கத்தோடு செயல்படுத்தியவர், காமராஜர்!

இன்றைய ஆளுவோர்களின் குறுகிய கண்ணோட்டத்தை, நினைக்கும்போது வேதனை மிகுகிறது!

ஆட்சி மாறினால் தொடங்கப்பட்ட திட்டங்கள் கைவிடப்படுவதும், புதிய திட்டங்களை தீட்டி, திட்டப் பகுதிகளும்,பயனாளிகளும்,பயன்பாடும் மாறுதல் செய்யப்படும் நிலையையும் பார்க்கிறோம்! முந்தைய ஆட்சியில் தொடங்கப்பட்டு முற்றுப் பெறாத திட்டங்களில் முடங்கும் பணமும் மக்களின்அடிப்படை தேவையும் கேள்விக்குறியாகி விடுகிறது! அதைப் பற்றி ஆட்சியாளர்கள் கவலைப் படுவதும் இல்லை!இது ஒருபுறம் இருக்க,இப்போது அடிப்படை தேவைகளுக்காக, நியாயமான கோரிக்கைகளுக்கு அரசின் கவனத்தை ஈர்க்க நடத்தப்படும் ஜனநாய வழியிலான போராட்டங்கள்,ஆர்பாட்டங்களும் இன்று அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டு,அவைகளை முறியடிக்கும் வகையில் எதிர்போரட்டங்கள் நடக்கும் அளவுக்கு அரசியல் சுயநலப் போக்குடன் மாறிவிட்டது! தேசத்தின் எதிர்காலம் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது!

தமிழகத்துக்கு தண்ணீர் விடக் கேட்டு தமிழர்கள் போராடினால்,தண்ணீர் விடகூடாது என்று கர்நாடகத்தில் எதிர்போராட்டம் நடக்கிறது! கூடங்குளம் அணு உலைகள் ஆபத்தானது!,அது வேண்டாம்!! என்று போராடினால், அதற்கு எதிர் போராட்டம் நடக்கிறது! இவைகளுக்குப் பின்புலத்தில் ஆட்சியாளர்களின் சுயநலமும்,ஆதாயமும் காரணங்களாக இருப்பதை காண முடிகிறது! பொது நலம், சேவை,சமுதாய மேம்பாடு,நாட்டு முன்னேற்றம் போன்ற உயர்ந்த பண்புகள் இந்திய அரசியலில் இருந்து விலக்கப்பட்டு,சுயநலமும் சுரண்டலும், ஆதாயம் பெறும் குறுக்கு வழியாக இந்திய அரசியல் மாற்றம் பெற்றுவிட்டது!

சரி, இப்படியே ... ஒவ்வொரு போராட்டத்துக்கும், ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு திட்டத்துக்கும் நாம் எதிர்வினை ஆற்றிகொண்டிருந்தால் என்னவாகும்?

எதுவும் உருப்படியாக நடக்காது! "ஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் "என்பதுபோல போராட்டத்துக்கு எதிர்போராட்டம் என்று மக்கள் தங்களுக்குள் போராடிக்கொண்டு
, நியாயமான போராட்டங்களை ஆதரிக்க முன்வரவேண்டும்! குறைந்த பட்சம் ஜனநாயக வழியில் நடைபெறும் போராட்டங்களை எதிர்க்காமல், எதிர் போராட்டம் நடத்தாமல் இருக்க மக்கள் முன்வரவேண்டும்!

சுயநல,சூழ்ச்சி அரசியலை புரிந்து,அதனை ஒதுக்கிவிட்டு, பொதுநல எண்ணத்துடன் பிரச்சனைகளை அணுக மக்கள் சிந்திக்க வேண்டும்! அப்படி மக்கள் தங்களுக்குள் சுயமுனைப்பு கொள்ளாதவரை,அரசியல் சூழ்ச்சியில் இருந்து விடுவித்துக் கொள்ளாதவரை,மக்களுக்கு ஆட்சியாளர்களால் எந்தவித நன்மையையும் ஏற்பட போவதில்லை! பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வுகளும் கிடைக்கப்போவதில்லை!

" எங்கும் பிலாக்கணங்கள்,எப்பாலும் பேய்க்கணங்கள்;
தங்குமிடம் அத்தனையும்,சரஞ்சரமாய் முட்கதிர்கள்!
மங்கையர்க்கும்,மானிடர்க்கும்,மண்ணிலுள்ள யாவருக்கும்;
ஒன்றல்ல உள்ளம்! உள்ளே இரண்டு மனம்! "

கண்ணதாசன் அன்று மனிதர்களுக்கு சொன்னது,இன்றைய அரசியல் சூழலுக்கும் பொருந்துகிறது!

ராஜன்

எழுதியவர் : (11-May-16, 3:52 pm)
பார்வை : 75

மேலே