பொய்யெழு தாதிவள் புன்னகை
கயலும் கவின்மீனும் துள்ளும் விழிகள்
சுனாமிப் புயல்புன் னகை
பொய்யெழு தாதிவள் புன்னகை ஆனாலென்
கையெ ழுதும்கவிதைப் பொய்
கண்ணில் இவள்வரைவாள் கம்பனின் காவியம்
வெண்ணிலாவில் நான்நடப் பேன்
இவள்நடந்த வீதியில் ரோஜா இதழ்தூவும்
நின்றால் இவள்தென்ற லும்
----கவின் சாரலன்
குறள் வெண்பாக்கள்