உங்களோடு தான் நான்

உந்தன் கன்னத்தில்
என்னை புதைக்கவா
இல்லை கண்ணுக்குள்ளே
புதையவா
உயிரை தொலைக்கவா
உடலை மறக்கவா
முதல் எது
முடிவு எது
குழம்பவா
இல்லை
முடிவில்
தொடங்கவா

இன்பத்தை உரமாக்கவா
உயிரை உனதாக்கவா
உன்னை எனதாக்கவா

கவிதைகள்
காவியங்கள்
படைக்கும்
ஆனால்
அதை
எல்லாம் விட
உங்கள்
கரம் பற்றிட
பிடிக்கும்
பற்றிய
கரத்தோடு
சாக பிடிக்கும்
செத்தாலும்
பிடித்த கையை விடாமல்
மீண்டும்
தொடர பிடிக்கும்
கரத்தை பிரிக்க
வெட்டியான்
முயற்சித்து
முடியாமல் போக
என் கையை வெட்டி
எடுப்பதை
ஊரார் பார்த்து
நம் அன்பில்
மெய்சிலிர்ப்பதை
கண்டு நீங்கள்
கண்ணீர் சிந்துவது மிக பிடிக்கும்
அமைதியாக
உறங்கிகொண்டிருக்கும்
என்னில்
கையை வைத்து
உயிரோடு இருக்கிறேனா
என்று பதறும்
உங்கள் அன்பு மிக பிடிக்கும்
பாசத்தில்
என்னுடனே
வரும்
உங்கள் அன்பு
மிக பிடிக்கும்

ஏசுபிரான்
போல்
என்
இதயத்தில்
ஒரு ஆணி
அடிக்க சொல்லுங்கள்
நீங்கள் வந்த இதயத்தில்
யாரும் நுழையக்கூடாது
திறக்கக்கூடாது

நிழலாக
ஆயிரம் முறை
நினைத்தாலும்
நிஜம்
ஒருமுறை
தீண்டிவிட்டால்
தீண்டிய நாதனும்
அருகில் இசை படித்தால்
வதைவது இல்லை உயிர்
புரல்வது ஏது உடல்
அசையாமல் கேட்டு களிக்கும்
நானும்
மறவாமல்
இசையில்
சுருதி மீட்டுவேன்
உங்கள் கைகளோடு
உயிர் இல்லாமலேயே
என்னை
விட்டு
எங்கேயும்
போய்விடாதீர்கள்
உடல் அழியும்
வரையிலும்

உயிர் பிரிந்தாலும்
உடல் அழிந்தாலும்
உங்களோடு தான் நான்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (13-May-16, 4:45 pm)
Tanglish : ungalodu thaan naan
பார்வை : 111

மேலே