ஜென்ம ஜென்மங்கள் கடந்தும் தொடரும் இந்த பந்தம்

எத்தனை
எண்ணிக்கை
இல்லை
முத்தங்களும்
ஜென்மங்களும்
இருவருக்கும்


உனக்காக நானும்
எனக்காக நீயும்
இருந்தும்
(ஒருவரின் பிரச்சனையில்
இன்னொரு உயிர்
உற்றதுணையாக
நிற்கவில்லையே
என்று ஒரு உயிரும்

என் உயிர் எனக்காக
வரவில்லையே
என்று மற்றொரு
உயிரும்
மனதோடு
போராடுவதே

உயிர்களின்
தேடலின்
ஆரம்பம்)
அப்பொழுது
யாரும்
இல்லாதது போல்
நம் ஊடலே
மாயையை
தோற்றுவிக்கும்


ஊடலில் ஒரு காதல் உண்டு
காதலில் ஒரு ஊடல்
உண்டு
ஊடலுக்கு பின் ஒரு
தேடல் உண்டு
அந்த தேடல்
தூரமாக தூரமாக
இருதயம்
வெடிக்கும்
இருவருக்கும்


ஊடல்
காலப்போக்கில்
சரியாகிடும்
இல்லை இல்லை
நம் காதலில்
சரியாகிடும்

ஊடலும்
சண்டையும்
நான்கு
நாட்கள்
தான்
அது பழகிவிட்டால்
அப்படியே காலம்
நகரத்தொடங்கும்
ஆனால்
என்னால்
ஒரு ஐந்துநிமிடம் கூட
தாக்கு பிடிக்க முடியாது
அதற்குள்ளாகவே
என் ஜீவன் போய்விடும்


காலம்
நம்
இருவரில்
ஒருவரை
பிரிக்க
எண்ணும்
இல்லை இல்லை
அதுமட்டும் இல்லை
இன்னொரு உயிரையும்
சரித்துச் செல்லும்
ஒன்றை பற்றும் முன்னே


எனக்கு முன்
நீ படுக்க நேர்ந்தால்
முதலில் நானே
படுக்கையாகிடுவேன்
நீ என் மேல்
படுத்துக்கொள்ள

நம் இருவரின் கைகளும்
கால்களும்
கட்டிக்கொண்டு
இதழ்களும்
ஒட்டிக்கொண்டு
இதயமும்
தொட்டுக்கொண்டு
கண்களும்
பரிமாறிக்கொண்டே
உயிர்களும்
உள் அமுங்குகிறது
நொடிகளை
இழந்து


எப்படியோ
உன்னை விட்டு
ஒரு நொடி கூட
பிரியக்கூடாது
உன்னை கட்டிபிடித்துக்கொண்டே தான் இருக்கிறேன்
உயிர் இருந்தாலும்
இல்லை என்றாலும்

இடைவெளி
இதயத்தில்
வலியை கொடுக்கும்
இதயத்தில் இருந்து
குருதி ஒழுகி
உன்னை நனைக்கும்
உன் மடியை
என் உயிர் இடிக்கும்
நீ தந்த முதுகெலும்பு
உடைகிறது
உன்னில் மூழ்கிட
உயிரை உன்னிடம்
ஒப்படைக்கும்
நீ எனை பிடித்துக்கொள்
நான் உனை
நன்றாக பிடித்துக்கொள்கிறேன்
உடலில் தான் தெம்பில்லை
உனை உடனேபற்றிக்கொள்ள வேண்டும்
உயிரில்
நீ நிறைந்திருக்கிறாய்
எனை நிறைத்துக்கொள்
என்னுயிரில்

இருவரும்
ஒரு படுக்கையில்
கட்டிக்கொண்டே
புதைகிறோம்
இல்லை இல்லை
அதுமட்டும் இல்லை
இருவரின் இதயமும்
உருகி
உடல்களை ஒன்றாய்
வேகவைக்கிறது
உயிர் தீயே
பார்த்து பார்த்து
அவருக்கு சுட்டிட போகிறது
எங்கள் கைகளை
பிரித்திட போகிறாய்
இல்லை இல்லை
அதுமட்டும் இல்லை
இருவரும்
ஒருவர் மீது
ஒருவர் கட்டிக்கொண்டே
மிதக்கிறோம்
நீரினில்

உன் மூச்சுக்காற்று எனக்குள்ளேயும்
என் மூச்சுக்காற்று
உனக்குள்ளேயும்
பரவிக்
கொண்டிருக்கிறது
மண்ணுக்குள்ளேயும்

இருவரும்
கட்டிக் கொண்டே
பறக்கிறோம்
வானத்திலும்

அங்கேயேனும்
இயற்கை
முழுமையாகட்டும்
நம் உலகில்
உயிரும் உடலும்
காற்று கூட
புக முடியா
இருக்கத்தில்
உயிர் நரம்பில்
பிண்ணி பிணையட்டும்
இதயம் ஒன்றாய்
துடிக்கட்டும்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (13-May-16, 4:35 pm)
பார்வை : 266

மேலே