அருகில் அவள்

அழகு என்று சொல்லி ஆறுதல் மட்டும் அடையேன்
அடை மழையும் சிறு துளியே
சிறு நொடியும் பல யுகமே
சித்திரை மாதத்தில் சிளிர்க்கிறேன்
சின்னஞ்சிறு பூக்களாய் மலர்கிறேன்
சாலைகளுக்கு என்ன செய்தேன்
எனக்கு சந்தர்ப்பம் சேர்த்தது
சாரல்கள் என்ன செய்யும்
உன் வீட்டு கூரையில் ஒதுங்கிடவே
பெருமழையும் தவிர்த்திருந்தேன்
உன் வீட்டு கூரையில்
ஓர் துளியில் நனைந்துக்கொள்ள,
மெய்சிளிர்தேன் மெதுவாய் உன் சப்தம்
நினைவுகளில் சேர்த்துக்கொள்ள
மெது மெதுவாய் உன் வீட்டு கதவு ஓசை
இருள் மழையும் கிழித்துக்கொண்டு
இனிமையென ஓர் நிலவே
இனிய நடை எட்டிடவே
இனிய கொழுசின் ஓசைக்கொண்டு - அவள் வரவே
மஞ்சள் முகம், மாலையும் மயங்கும்
மாமலையும் அவள் அழகால் குறையும்
எத்திசையில் என் மனம் பாயும்
எண்ணில் அடங்கா இவள் அழகில்...
போதும் பெண்ணே சிறு பார்வை
பொய்த்து போகும் என் உயிரே....

எழுதியவர் : ஆனந்த். க (13-May-16, 4:30 pm)
பார்வை : 142

மேலே