முத்தம்-1

மூலிகை இலைகளோ உன் உதடுகள்...
எல்லா நோயும் சாகிறது ஒரே முத்தத்தில்.....
===========
கிசு கிசு பேசும் முத்தம்...
கிச்சு கிச்சு மூட்டும் முத்தம்....
காதோர முத்தம்.....
==========
மனிதனை எந்திரனாக்கும் முத்தம்....
எந்திரத்தில் மனிதம் பார்க்கும் முத்தம்.....
===============
அவளுக்கும் எனக்கும் இடையில்...
என் மகள் - தூதுபறா....
சிற்சமயம் முத்தங்களை சுமப்பாள்....
=============================
எரிமலையாய் கோபம்...
பனிமலையாய் உறைந்தது...
ஒரே முத்தத்தில்.....
==============================
காகிதமும் உயர்திணை......
காதல் கடிதத்தில் உன் முத்தம்....
============================
தாடி மீசை வளர்ப்பதில்லை...
கருப்புக்கொடி போல் தெரிகிறதாம்...
முத்தம் தருபவளுக்கு....
==========================
வெள்ளி மீசை தாத்தாவுக்கு
பேத்தியின் தங்க முத்தங்கள்....
================================
முத்தம் ஒன்றால்
தகடுதத்தம் செய்வாள் காரியக்காரி....
அன்று போதிய வருமானம் இல்லை...
செவ்விலைகளை குவித்து வெறும் முத்தத்தாலே
பசி தீர்த்தாள்....
==============================
உதடு ரேகை வேணுமாம்...
ஜோசியம் பார்க்க
கன்னத்தில் பதித்து சென்றான்....
=============================
வேலை செய்தால் வியர்க்குமாம்...
உதடுகளால் ஆராய்ச்சி...
முடிவுறா முத்தங்கள்....
==========================
ஆயிரம் முறை என் உயிரை காப்பாற்றியது...
அவளின் முதலுதவி முத்தங்கள்...
காதலுக்கு பொய் அழகு....
======================
முத்துக்குளியல் சலித்துவிட்டது...
முத்தக்குளியல் தொடங்கிய பின்னே....
கடலின் ஆழம் சலித்துவிட்டது...
காதலில் காலடி வைத்த பின்னே...
======================
காதலனுக்கு இன்னும் மீசை முளைக்கவில்லை...
திருகி விளையாட முறுக்கு மீசை வேண்டுமாம்...
முத்தத்தால்(ஈரம் பாய்ச்சி) முளைக்க வைக்கிறாள் காதலி....
==========================
இருவருக்கும் தாகம்....
ஒற்றை பனிக்கட்டி...
வாயோடு வாய் முத்தம் பாலமானது....
தாகம் தீர்ந்தது.....
====================
மாலையில்லை....
தாலியில்லை...
கணையாழியில்லை....
திருமணம் நடந்தது...
முத்தங்கள் அணிவித்துக்கொண்ட மணமக்கள்....
மண்டியிட்டு மணமகளின் கையில் முத்தம் - வேண்டுகோள்.....
மணமகனின் நெற்றியில் முத்தமிட்டாள் மணமகள் - காதல் ஏற்பு....
==========================

எழுதியவர் : மா.யுவராஜ் (14-May-16, 10:58 am)
சேர்த்தது : யுவராஜ்மா
பார்வை : 534

மேலே