10 செகண்ட் கதைகள் - டீ

காமராஜர் ஒரு முறை ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடையே தேநீர் வந்தது.. டீயக் குடிங்கன்னேன்.. என்றார் காமராஜர்.. தேநீரைப் பருக சில நிமிடங்கள் தயக்கம் காட்டினார் அந்த கலெக்டர்..
உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது...
ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்...
பிறகு கலேக்ட்டரிடம்... "...டீயைக் குடிப்பதா வேண்டாமான்னு யோசித்த நீங்க.. அந்த ஈயைப் பத்தி நினைக்கலையே... உங்களுக்கு டீ தான் பிரச்சனை.... ஆனா அந்த ஈக்கு..? வாழ்வா சாவா-ங்கறது பிரச்சனை.... இப்படி உங்க சைட்ல இருந்து மட்டுமே நீங்க சிந்திச்சு செயல்பட்டா... மக்களோட சைட்லே எப்படி சிந்திப்பீங்க..??.."­
கலெக்டர் தலை குனிந்தார்... படிக்காத மேதை...

எழுதியவர் : செல்வமணி (14-May-16, 3:45 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 248

மேலே