உயிரில் ஒரே கீதம் உயிர் ராகம் பாடும் உன் மடி சாயும் அடி மேல் அடி விழும் நாளும் அன்பு பெருகும் உயிர் ஒன்றில் ஒன்று கரையும் இறுதியில் உயிர்கள் மயக்கமாகும் இதுவே நாளையும் தொடரும்
![](https://eluthu.com/images/loading.gif)
எது அடிமை தனம்
என் பரந்தாமன் தாமரை பாதத்தை பிடித்து விடுவதா !
என்னவரின் கால்களை கட்டிக்கொண்டிருப்பதா!
அவரின் கால்களை என் மடியில் தாங்குவதா!
நாதனின் காலை நெஞ்சில் தாங்குவதா...
அவர் என்னை நெஞ்சத்தில் மிதிப்பதா...
என்னை எட்டி உதைப்பதா
என்னை அரைவதா...
என் கழுத்தை நெறிப்பதா....
என்னை அவர்
கொலை செய்தாலும்
அது கொலையாகாது
என் பிறப்பருத்து
கஷ்டமே என்பது அறியா
விண்ணக வாழ்க்கைக்கு
எனை அனுப்பிவைக்க
கருணை கொலை செய்திட்டார்
என் கணவர்
எங்கள்
வீட்டில்
அவருக்கு முன்
நான் உண்டுவிடுவேன்
பசியல்ல
அவர் மீது
நான் வைத்திருக்கும்
பாசம்
அவருக்கு எதிரிகள்
அதிகம்
ஆதலால்
யாரேனும்
உணவில் நஞ்சு வைத்துவிட்டால்
அவருக்கு பின்னால்
நான் நிற்பதே இல்லை
அவருக்கு ஒரு அடி
முன்னால் நிற்கிறேன்
எங்கேயிருந்தும்
கத்தியோ குண்டோ
பாய்ந்துவிட்டால்
ஒரு நாள்
அவரின்
உயிர்த் தோழன்
அவரை காண
வந்திருந்தார்
நானும்
தேநீர் கொண்டுவர
சமையவ் அறை சென்றுவிட்டேன்
அந்த கால நேரத்தில்
அவரின் நண்பன்
பாசமாக
அணைத்து
கத்தியை அவர் மீது சொருகிவிட்டான்.
அவர் என்
பெயரை சொல்லி
அலரும் சத்தம் கேட்டு
ஓடி வந்தேன்
ஓட்டம் நின்றுவிட்டது
என் இதய ஓட்டம்
நின்றுவிட்டது
இரத்த வெள்ளத்தில்
அவர் சரிந்து கிடந்தார்.
அதை பார்க்க
என் கண்களால்
எப்படி முடிந்தது
இதயம் சுக்கு நூறாக
வெடித்தது
கோபக் கனல் கொழுந்துவிட்டு எரிய
துரத்தினேன் துரோகியை
அவன் சிரித்துக்கொண்டே
நீ நிராயுதபாணி
உன்னிடம் ஆயுதங்களே
இல்லை என்று கூவினான்
என் கையே
உன்னை கொல்ல போதுமடா
நம்பிக்கை துரோகி
நண்பன் என்றால்
என்ன என்று
உனக்கு தெரியாதாடா
கொலைகாரா
என் கையால்
அவன் கழுத்தை நெருக்கி சாய்த்து
கொண்டிருக்கும்
வேளையில்
அவனின் கத்தி
என் மார்பில்
ஒன்று இரண்டு என்று
இறங்கிக்கொண்டே இருந்தது
நான் சிரித்துகொண்டே
கூறினேன்.
என் உயிர் போய் 5 நிமிடம்
ஆகிறது
நீ வெறும் சதையைத் தான் குத்திக்
கொண்டிருக்கிறாய்
என் உயிரை ரத்தவெள்ளத்தில் காணும் கணமே நான் இறந்துவிட்டேன்.
என் உயிர் அதோ இரத்தவெள்ளத்தில் உன்னை கரைக்கச்சொல்லுகிறது
பின் எனை
கலக்கச்சொல்லுகிறது
இதோ வந்துவிட்டேன்
நாதா
செத்து ஒழியடா
நீ எல்லாம் இந்த பூமிக்கு பாரம்...
மூச்சை இழந்தான்
குல துரோகி....
ஐயோ
என்னால் நடக்க முடியவில்லையே
நான் அவர் அருகில்
செல்ல வேண்டும்
எப்படியாகினும்
சென்றிடுவேன்
அவர் அருகில்
நான்கு கால் பாய்ச்சலில் சீறினேன் நான்.
பின் உருண்டு பிரண்டு
வந்துசேர்ந்துவிட்டேன்
அவர் அருகில்
அவர் தலையை எடுத்து
என் மார்போடு அணைத்துக் கொண்டு கதறுகிறேன்
அவர் மூச்சை நான்
உள்வாங்கினேன்.
அவரை என் மடியில்
கிடத்தி
ஆசுவாசப்படுத்தி
எழுப்பிக்கொண்டே இருந்தேன்
அவர் கண் விழித்தார்
என் மனம் திறந்தது
அவரை மேலும் மேலும் அள்ளி அள்ளி பருகினேன்..
காதலில் மட்டும் தான்
போதும் என்ற வார்த்தை கிடையாது...
நான் மீண்டும் மீண்டும்
அவரை உள்வாங்கினேன்...
அவரும் எனை பார்த்துக்
கொண்டே இருந்தார்
மேலே பறக்கிறேன் நான்
அவருக்குள்ளே என் மனம் கட்டுண்டு
முகத்தை முத்தங்கள் முழுமையாய் மறைத்து
மறைந்து போகிறோம்
மேவிடும் அன்பில்
உடலை தளர்த்தி
உணர்வின் உயிரில் இருவரும் ஒன்றாய்
கண் அயர எழுப்ப யாரும் இல்லை...
உடல் உடை
காமம் மோகம்
இல்லா உலகம்
நாம் வாழ செல்கிறோம்
என்று கடைசி கடைக்கண் பார்வைகள்
பேசின.
உலகத்திற்கு கூறிக்கொள்கிறோம்
எங்களை தூக்க எட்டு பேர் தேவை இல்லை
நான்கு பேரே போதும்.
எங்கள் உடலைகூட பிரித்துவிடாதீர்கள்
உடலை தூக்க தான் நால்வர் தேவை.
எங்கள் உயிரை தூக்க
நாங்கள் போதும்.
எனக்கு அவரும்
அவருக்கு நானும்
போதும்
வேறு என்ன வேண்டும்..
இந்த வாழ்க்கை மீண்டும் வேண்டும்
மேலே கீழே
எதுவானாலும் பரவாயில்லை
நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்
அது போதும்
கண்ணுக்குள்
நுழைந்து
உடலுக்குள்
கரைந்து
உயிருக்குள்
வாழும்
இறைவா வா போகலாம்
அங்கும்
நம் இசை பாடும்
உயிர் நாதம்
மிதிலாவும்
அயோத்தியும்
இனி இல்லை
ஒரே உலகம்
நம் உலகம்
~ பிரபாவதி வீரமுத்து