உயிரை எடுப்பேன் உயிரை கொடுப்பேன் உனக்காக நாதா

என்னவரை கொல்ல
வேண்டுமென்றால்
முதலில் எனை கொன்று விட்டு செல்லுங்கள்
இல்லையேல் உங்கள் எண்ணம் ஒருகாலமும்
நிறைவேறாது
என் உடம்பில் கடைசி சொட்டு உயிர் உள்ளவரை
உங்களால் அவரை தொட்டு கூட பார்க்க முடியாது...
முதலில் என் வாளுக்கு
பதில் சொல்லிவிட்டு
அப்புறம் இங்கிருந்து
நகர்வதா இல்லையா
என்பதை தான் பாருங்களேன்.

எனக்கு உடல்நிலை சரியில்லை
என்றால்
மருந்தை தேடாதீர்கள்.
அவரை என்னருகில்
அழைத்துவாருங்கள்


எனக்காக
பஞ்சு மெத்தை
எல்லாம்
வாங்காதீர்கள்
அவர் மடியே போதும்
அதுவே எந்நாளும் வேண்டும்

எனக்கு தலையணை வேண்டாம்
என்னவரின்
மார்புக்கூட்டிலே
உறங்கிடுவேன்
உறைந்திடுவேன்

நான் கால்கள் இல்லாமலேயே நடப்பேன்
அவர் தான் என்னை
தூக்கிக்கொண்டாரே

நான் கண்கள்
இல்லாமலேயே
யாவையும் காண்பேன்
அவர் நெஞ்சத்தில்
அவர் கண்களில்

தினமும் நானும் அவரும்
ஒளிவு மறைவின்றி
யாவையும் பேசிக்கொள்வோம்

அவர் இதயதுடிப்பை
கேட்க காதுகள்
அவசியமா
உணர்வுகள் போதாதா...

அவர் கண் கலங்குவது
எனக்காக தான்
நான் வெயிலில் நின்றால்
சூரியனை எரித்திடுவார்
மழையில் நனைந்தால்
கருப்பு கொடி காட்டிடுவார்


கலங்கிடுவார்
காரத்தால்
நான்
உச்சி முகர்ந்து
நீர் வார்த்திடுவேன்

அவர் கண் கலங்கினால்
என் உயிர் நதி கலங்கும்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (15-May-16, 12:19 pm)
பார்வை : 112

மேலே