கண்ணில் தெரியுது காதல் பார்வை

ஏன்! என்னுள் ஏனிந்த மாற்றம்!
என்னைச் சுற்றி என்னென்ன மாற்றம்,
எனக்கு ஒன்றும் புரியவில்லை!

இதயம் படபடக்கிறது!
பறக்கிறது! பரபரவெனப் பறக்கிறது!
எண்ணப் பறவை எங்கெங்கோ!

ஓ! அவளைப் பார்த்தேன்!
முதன் முதலாகப் பார்த்தேன் - அவள்
கண்களில் காந்தத்தைப் பார்த்தேன்!

என்னையே மறந்தேன்!
அவளும் நோக்கினாள்! நானும் நோக்கினேன்!
காதல் முதல் பார்வையிலே!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-May-16, 3:19 pm)
பார்வை : 404

மேலே