நீரின் கடல் இன்பமான பயணம்

கல்லும் பாறையும் குதித்து வந்தேன் -பிறகு
காடும் செடியும் கடந்து வந்தேன்
எல்லை விரிந்த சமவெளி -எங்கும் நானே
இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன்
காயும் நிலத்தையும் ஆற்றி வந்தேன்-அதில்
ஆயும் மலர்பொழில் செய்துவந்தேன்
பச்சை பயிர்களை கண்டுவந்தேன்
ஆசை தீர வில்லை ஆடி வந்தேன்

ஏறாத மேடுகள் ஏறி வந்தேன்
ஆரி குளங்கள் நிரப்பி வந்தேன்
ஊராத ஊரிலும் உட்புகுந்தேன் -மணல்
ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்
இந்த அருமையான கடலுக்கு
-ஷிவானி

எழுதியவர் : ஷிவானி VH (17-May-16, 5:17 pm)
பார்வை : 1349

மேலே