வஞ்சித்துறை திரண்டுவந்து கொண்டிருந்த
வஞ்சித்துறை ..
திரண்டுவந்து கொண்டிருந்த
காரிருள் மேகங்களை
ஓடிவந்து காற்று
அங்குமிங்கும் சிதறடிக்க
மிரண்டோடும் மேகங்கள்
ஒன்றின்மீ தொன்று
மோதிக் கொள்ள
நேரிடும் நேரம்
செவிகள் பிளக்கும்
இடி முழக்கம்
கேட்டுஎன் நெஞ்சம்
படபடக்கும் அந்நேரம்
கைகள் கொட்டி
சிரித்தது வீட்டின்
கூரைமீது வேய்ந்து
தேய்ந்திருந்த தகரம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
