மானுட வரலாறு
புராதான சமுகம் பொதுடமையாக இருந்ததாம்
காடுகள் பரவி கிடந்ததாம்
உண்டார்கலாம் வேட்டையாடிமனிதர்கள் விலங்குகளை
கொடுரவிலங்குகளும் இருந்ததாம் பயமுறுத்த மனிதர்களை
இடி மின்னல்களும் பயமுறுத்தின அவனை;
பயந்தவன் வழிப்பட்டான் வழிப்பட்டான் இடி மின்னல்களை
பயந்தவன் வழிப்பட்டான் வழிப்பட்டான் சந்திர சூரியனை
கொடூர மிருகங்களையும் சிலைகளாக வடித்து வேண்டினான்
தம் பயம் போக்க
இப்படியாக ஆரம்பித்தது கடவுள் வழிபாடு என்று சொல்கிறார்கள்
அகழ்வாராச்சியாளர்களும் அறிஞர் பெருமக்களும்
புதைத்தானாம் புதைத்தானாம் இறந்தவர்களின் சடங்களை
முளைத்ததாம் முளைத்ததாம் புதைத்த இடங்களின் மேல்
சிறிய சிறிய செடிகள்
பார்த்தனராம் பார்த்தனராம் வீட்டிலிருக்கும் பெண்கள்
பின்னர் அறிந்தனராம் அறிந்தனராம் அவைகள் விவாசாய செடிகள் என்று
தெரிந்துகொண்டான் அப்படித்தான் விவசாயத்தைப்பற்றி
இனக்குழுக்களாக இருந்தவன் வறட்சிக்காராணாமாக
பிரிந்து நகர்ந்தான் நகர்ந்தான் அக்காடுகளை விட்டு
நகர்ந்தவன் கண்டான் கண்டனான் நீரைக் சுமந்து கொண்டிருக்கும்
நதிகளை
தங்கினான் தங்கினான் அவைகளின் அந்தந்த கரைகளின்ஓரங்களில்
அங்கு வாழ்ந்தான் வாழ்ந்தான் நதிகளின் நீர் வற்றும் வரை
பிறகு சண்டையிட்டான் சண்டையிட்டான் உணவுக்காக
செழிப்பான இடங்களிலிருக்கும் இனக்குழுக்களிடம்
ஆண்டையானார்கள் ஆண்டையானார்கள் சண்டையில் வெற்றிப்பெற்றக்குழுக்கள்
அடிமையானார்கள் அடிமையானார்கள் தோல்வியடைந்தக் குழுக்கள்
இப்படியாக இப்படியாக வந்தது நிலவுடைமை சமுதாயம்
சில காலங்கள்க்கழித்து வந்தது முதலாளித்துவம்
உலகில் தற்பொழுது வெடிக்கின்றன புரட்சிகள் ஆங் ஆங்கே
ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்கள் காத்திருக்கின்றனர்
பொதுவுடைமை புதிய சமுதயத்திற்க்காக
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
