கதம்பம்
உனக்கு வருவதை
உனக்கு தெரிந்ததை
உன்னால் முடிந்ததை
செய்
யாரையும் நம்பிடாதே
யாரையும் ஏமாற்றாதே
எல்லாம் நடக்கும் நன்றாய்
பாம்பு இல்லாமல்
பரமபதம்
ஏது?
ஏணி மட்டுமிருந்தால்
விளையாட்டு ருசிக்குமா!
வெண்ணெய்
வழிந்துவரும் வேளை
தாழியை உடைத்தானே
நந்தவனத்தின் ஆண்டி
அவன் ஆனானே பழனி மலையாண்டி
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
ஆஹா
உயிரினம்
உயிரினம்
உயிரினம்
ஓட்டை சட்டியிலே
யானை போகுமே
சட்டி இருந்தும் தான்
அகப்பைய
காணோமே
டன்டனக்கருனாம்
ஏ டனக்குனக்கருனாம்
வாய்மை வெல்லும்
வாழ்க்கை வெல்லும்
வாய்மை...........
....... வெல்லும்
மஞ்ச சேல இறுக்கி கட்டி
மரிகொழுந்து சூடி வந்த
மைனா இவ தானே
என்ன நைசா உருவி போனா
உதிரத்தில் கலந்தவனே
உதிரமானவனே
உள்ளத்தில் நிறைந்தவனே
உள்ளமானவனே
வேல் கொண்டு சாய்பவனே
வேல்விழி வேலவா
நான் உன்னை கேட்பதெல்லாம்
உந்தன் பாதம் தானே(2)
மயிலம் முருகா
அப்பா
குகனே
குமரா
வடிவேலா
ஷண்முகா
ஆறுமுகா
கார்த்திகேயா
.....
.....
அருள்வாய்
மண்ணில் வாழும்
மலர்கள் யாவும்
மறுநாள் காலை
மறந்தே போகும்
மங்கை நீயோ
மண்ணில் வீழும் நாள் வரை
மயானம் ஓட விடு
மறிக்கும் கைகளை
தூரம் தூள் தூளகட்டும்
நாதம் இசைக்கட்டும்
புது வேதம் எழுதட்டும்
எட்டும் அதிரட்டும்
நின் பெயரும்
கார்மேக கூந்தல்
காற்றை வீசியதோ
அமுதை சிந்தியதோ
துளிரும் சிரிப்பில்
சிந்தியது என்னுயிர்
தவழும் முந்தானையில்
என் சித்தந்தனை இழந்தேன்
அவள் உயிரில்
எனை கலந்தாள்
ஒரு பிடியில்
நான் பிடி சாம்பலாய்
கரைந்தேன் அவளுள்
மாமா விட்டு பிரியாதே
தூரம் வலிக்கிறதென்பாள்
நான் அணைத்துக்கொள்ள
எனை அணைத்துக்
கொல்வாள்
மடிதூக்கம் நிதம் வேண்டும் என்பாள்
கதைகளை காதோடு பேசிக்கொண்டு
மனதில் சிரித்துகொண்டு
இதழை ஈரப்படுத்தி
உயிரை வசியப்படுத்தி
மார்போடும் மடியோடும்
கண் அயர்வாள்
(படுத்திடுவாள்)
அவள்
தலையணை வாங்கும்
அணைப்பை
முத்தத்தை
கண்ணீரை
என்பெயரில்
அவள் மார்போடு தூக்கம்
மரணம் வரை வேண்டும்
மடியில் மரணம்
நான் மட்டும் கேட்பேன்
கவலைகள் சுமந்து
வாடி வரும் பொழுது
கட்டியணைத்து பாதி
பயத்தை போக்குவாள்
மீதியை மடியில் தூங்க வைத்து ஆறுதல் பேசி
முத்தங்கள் வைத்திடுவாள்
அவள் தலையை கோதிவிடும்
தருணம்
நீளக்கூடாதா
என்று தோண்றும்
உங்கள் மூச்சுக்காற்றையே
நான் தினமும் சுவாசிக்க வேண்டுமென்பாள்
உங்கள் கைகளில்
ஓர் குழந்தை போல் தவழ வேண்டுமென்பாள்
காற்றை போல் எனை
சுற்றி நீங்கள் வாழ வேண்டும்
துகளை போல் உங்களில் நான் கலக்க வேண்டும்
பாதைகள் தொடரும் நாளை
அந்தி வேளை
அத்தான் உங்கள் மடியில் நான்
நான் உயிரையே
உங்களையே பார்த்துக்
கொண்டிருப்பேன்
அந்த உணர்வை வார்த்தையில் சொல்ல முடியாது
ஊணும் உயிரும்
உங்கள் பெயரையே சொல்லும்
உனக்காகவே துடிக்கும்
உன்னாலே துடிக்கும்
எதிர்வரும் நாளும்
உன் புகழ் பாடும்
உங்களில் உடலை ஏமாற்றிவைத்து விட்டு
உயிரை எடுத்துக்கொண்டு
என் உயிரை உங்களிடத்தில் விட்டுச்செல்கிறேன் மாமா
இதயத்த
பிழுஞ்சி
சாராக்குற
உசுரு கரையுதடா
உன்ன பாக்காமா இருக்க முடியலடா
வா உசுரே
உசுரானவனே
உடல பாக்கவா
இல்ல
உடல எரிச்சுபோடா
அடியே
உசுரே
உடனே
வர்றன்டி
உசுர
விட்டு
எங்கே போவடி
உயிரில் பிறந்திடுவேன்
பிறப்பில் இறந்திடுவேன்
இறப்பில் மகிழ்ந்திடுவேன்
நான் தொலைத்து
நீ புதைத்து
வா நாம் ஆவோம்
உடலை விற்றிடுவேன்
உங்களிடத்தில்
உயிரை பெற்றிடுவேன்
என்னிடத்தில்
உயிரை விட நீங்கள் பெருசு
நானே தானே மாய்வேன்
கோவிலா நான் இருந்தா
சாமியா நீ வேணும்
கடலா நீ இருந்தா
கரையா நான் இருப்பன்
கறிக்கடை ஆடாய் ஆனேனே
நீ இல்லாமல்
நான் தானே
சரிகமபதநி
உயிரே
வா நீ
டக்கு டக்கு
டக்கு டக்கு டா
டடட்டா
டக்கு டக்கு
டக்கு டக்கு டா
அச்சு அச்சு
அச்சு வெல்லத்தால்
முத்தம் தா
மச்சு மச்சு
மச்சு மச்சானே
நீரின்றி போனாலும்
நிலமின்றி போனாலும்
நீ எனக்கு வேணும்
டீ கிளாஸ் பன்ன போல
உனக்குள்ள முங்கிடுவன்
பன்ன பிச்சி பிச்சி திண்ணடா
என்னடா
சொல்லடா
நான் எங்கேயடா
உனக்குள்ளே வீழ்ந்தேனடா
எழ மனமே இல்லையடா
உன் உயிர்
பாடும்
ராகம்
நாதம்
முழு நிலவு
மணல்வெளி
மடி தூக்கம்
உன் விழியால்
நாளும் மறக்கிறேன் எனை
யாக்கை மறக்கும்
காதல் வேட்கை
காலம் மறக்கும்
உயிர் ஊணை
இடி இவள்
மழை இவள்
குடை இவள்
வெயில் இவள்
வலி இவள்
வாழ்க்கை இவள்
தீண்டி கொல்கிறாய்
தீண்டாமல் (பிரிந்து) கொல்கிறாய்
அகம் கொல்லும்
புறம் கொல்லும்
அகம்
முக அமுத
முத்தத்தில் கிறங்கி
மடியில் வீழும்
உயிர் உடல்
சங்கமிக்கும்
புறம்
பிரிவெனும்
வேலில்
தன்னையே
இழந்து
தனிமையில் வாடி
உயிரில் கலக்கும்
உடலை இழந்து
எவ்வளவு பருகினாலும்
காதல் தாகம்
அடங்குவதே இல்லை
என்ன சொன்னாலும்
அது உன் அன்பில்
ஒரு விகிதம் மாத்திரம்
கூட இல்லை
தொடரும் நாளும் தொடரும்
நாளையும் தொடரும்
நான் மண்ணில்
இல்லை உன் மடியில்
வீழும் கடைசி நாளும்
தொடரும்
கதம்பம் மாலையாகும்
~ பிரபாவதி வீரமுத்து