மனமும் அறிவும்

நம்மை இயக்குவது
இவை இரண்டும்

ஒன்று சலனப்படும்
மற்றொன்று பக்குவப்படும்

ஒன்று நம் சொல் கேட்கும்
மற்றொன்று நம்மை கேட்க வைக்கும்

ஒன்று நமக்காக துடிக்கும்
மற்றொன்று நிதானமாக செயல்படும்

ஒன்று ஐம்புலன்களுக்கும்
அடிமை ஆகும்

மற்றொன்று ஐம்புலன்களையும்
ஆட்டி வைக்கும்

ஒன்று செயல் பட்ட பின்
சிந்திக்கும்

மற்றொன்று சிந்தித்த பின்
செயல்படும்

ஒன்று துயரத்தில் சிக்கித்
தவிக்கும்

மற்றொன்று அதிலிருந்து
வெளிவர வுதவும்

ஒன்று ஆசைக்கு
அடிமையாகும்

மற்றொன்று
அதை அடிமைப்படுத்தும்

இருந்தும்,

ஒன்றின் வாழ்வு
முடிந்தால்

மற்றொன்றின் வாழ்வும்
முடிந்து விடும்

அப்படி ஒரு ஒற்றுமை
இந்த இரண்டிற்கும்

ஆம் .....

நம்மை ஆட்டி படைப்பதும்
இவை இரண்டும் தான்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (18-May-16, 2:56 pm)
Tanglish : manamum arivum
பார்வை : 314

மேலே