இதுவரை

கண்டுக்கொள்ளப்படாத
கவிதை
கெக்கலிகொட்டிச் சிரிக்கிறது.

கால தூரக்
கைகளுக்குள்
அகப்படாத சாகசம்
அதன் கண்களில்
மினுங்குகிறது.

மூளை தொடமுடியாத
தூரம் எது?
அறியாமை முகங்களில்
பலத்த அறை.

எழுதியவர் : கனவுதாசன் (18-May-16, 8:37 pm)
Tanglish : ithuvarai
பார்வை : 107

மேலே