காவடிச்சிந்து - 7

கண்ணனை எண்ணுக நெஞ்சமே - அவன்
காலடி பற்றுக கொஞ்சமே - அந்தக்
கள்வனைப் பற்றினால் தஞ்சமே - உந்தன்
கனவேயது நனவேபெற இனிதேவர வளமேபெற
காத்திடு வானுனை நெஞ்சமே - நம்
காலமு மேமாறும் கொஞ்சமே


துன்பங்கள் என்றுமே வாழ்விலே - நம்மைத்
தூய்மையு றச்செயும் தாழ்விலே - அந்தத்
தூயவன் என்றுமே சோர்விலே - நம்
துணையேவர நலமேதர சுகமேபெற அவனேதுணை
தோழமை யைக்கொண்டு பாரிலே - நாளும்
துன்பமென் றில்லையே ஊரிலே


கவிதையாக்கம்:திருமதி.மஞ்சுளாரமேஷ்

எழுதியவர் : மஞ்சுளாரமேஷ் (19-May-16, 12:11 am)
பார்வை : 148

மேலே