புது சந்திப்பு
வழக்கமான பயணம்...
பழக்கமில்லாத பயணியிடம் பேச, ஏனாே...
வழக்காடுதே என் எண்ணங்கள்...
பார்வை உரசிய தருணம்...
அவள் அழகை உண்ட என் கண்கள்..,
பாேதையில் தள்ளாடுதே...
மெல்ல நகரும் மேகங்கள் நிலவிடம் ஏதாே...
சாெல்ல நினைப்பது பாேல், நானும் என்
மெளனங்களை உன்னருகே காென்று குவிக்க ஆசைப்பட்டேன்...
தாெடர்வண்டியின் வேகம், வேகமாய் இலக்கை தாெட்டுவிட்டது...
முயற்சி தாேற்றுவிட்டது...
காற்றில் கலைந்த மேகமாய்... நானும்
இறங்கிசென்றேன் சாேகமாய்...
உன்னுடன்.., வழியில் சந்திப்பு...
விழியில் உரையாடல்... மீண்டும்
(வர)வேண்டுமென வேண்டுகிறேன்.