உன் மேல் உள்ள காதல் நொடிக்கு நொடி கூடிக்கொண்டே இருக்கிறது அன்பு கணவா

உனக்காக எழுதிடுவேன்
பல
குறுஞ்செய்திகளை
ஆனால் அனுப்புவதில்லை
எல்லாவற்றையும்
காரணம்
அவை முழுமையடைவதே இல்லை
அப்படி இருந்தும்
எப்படியாகினும்
மனதை கொட்டிவிட வேண்டுமென்று எழுதுகிறேன்
காலை முதல் இரவு வரை
ஆனால் சொல்லி
முடிக்கமுடியவில்லை
இருந்தும் அனுப்புகிறேன்
என் சென்மம்(SentBox) முழுவதையும்
உனக்கே

உனக்காக
உன்னிடம் பேச
அழைப்புகளுக்கு அடிக்கடி
செல்கிறேன்
(அழைப்புகளிலேயே தங்கிடுவேன்)
அழைத்தால் நீ திட்டுவாய் என
பல அழைப்புகளை துண்டித்துவிட்ட மீதி தான்
உன் கைக்கு வந்த
பல நூறு அழைப்புகள்

எவ்வளவு பேசினாலும்
பேசினோமா
என்று தோண்றுகிறது
இரவு பகலும் கடக்கிறது
என் ஜுவன் மட்டும்
ஓயாமல் துடிக்கிறது
உனை பார்க்க வேண்டுமென்று

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (20-May-16, 9:40 am)
பார்வை : 303

மேலே