நீ என் காதலியானால்
உன் பார்வையில் தொலைந்து
எனை தேட வேண்டும்
உன் வார்த்தையில் மகிழ்ந்து
சுகம் காண வேண்டும்
உன் நினைவில் கலந்து
உயிர் வாழ வேண்டும்
உன் நிழலில் நடந்து
இளைப்பாற வேண்டும்
உன் தோளில் சாய்ந்து
உலகை மறக்க வேண்டும்
உன் மடியில் கிடந்து
உயிர்ப் போக
வேண்டும்
நீ என் காதலியானால்!!!