அவள் வரவில்லை
எழுதலாம் கவிதை என்று
தனிமையில் அமர்ந்தேன்
பொழுது சாய்ந்தது
பூக்கள் சிரித்தன
நிலவும் வந்தது
ஆயினும் திரும்பி நடந்தேன்
பின் தொடர்ந்து வந்த
தென்றல்
இன்னுமா எழுதவில்லை
என்று கேட்டது
அவள் வரவில்லை
என்றேன்
சரிதான் என்று
தென்றலும் திரும்பிச் சென்றது !
பொழுதும் இரவோடு சாய்ந்தது
மலர்ந்த பூக்களும் வாடி நின்றன
தென்றலும் ஓர் ஓரத்தில் வீசாமல் நின்றது
ஏன்
அவள் வரவில்லை !
-----கவின் சாரலன்
இதில் நிலவு என்ன செய்தது என்று சொல்லவில்லை .
பொருத்தமான ஒரு வரி பரிந்துரையுங்கள் . பதிவு செய்கிறேன்