பயணம்
மேடு பள்ளம் கடந்து
ஆடும் பேருந்து
நீ ஏறும் போது
அது திருவாரூர் தேர் உந்து ..!!
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
நீ இறங்கும்
நிறுத்தம் தெரியாமல்
உன்னுடனே பயணிக்கிறேன்
இந்த பேருந்தை போல..!!
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
பயணம் என்னவோ
உசிலம்பட்டிக்கு தான்
நீ ஏறிய பின்பு
அது போகுது
எலிசபெத் ராணியின்
லண்டன் சிட்டிக்கு தான்...!!
*** *** *** *** *** *** *** *** *** *** *** *** *** ***
ஓட்டுனர் கிருஷ்னனனார்
நடத்துனர் அர்ஜுனன்னனார்
பேருந்து ரதமானது
நாம் சிப்பாய்களானோம்
மூண்டது காதல் போர்..!!!