பத்து பார்வை

என்னை நீ!
பத்து முறை
திரும்பி திரும்பி
பார்த்தாய்..
கண்ணை இழந்தேன்
முதல் பார்வையில்...
மண்ணை மறந்தேன்
இரண்டாம் பார்வையில்...
விண்ணில் பறந்தேன்
மூன்றாம் பார்வையில்...
நிலவை தொட்டேன்
நான்காம் பார்வையில்...
மீண்டும் மண்ணில் குதித்தேன்
ஐந்தாம் பார்வையில்...
இதயம் தொலைத்தேன்
ஆறாம் பார்வையில்...
காதல் கொண்டேன்
ஏழாம் பார்வையில்...
உன்னில் சென்றேன்
எட்டாம் பார்வையில்...
இதயசாவியை உடைத்தேன்
ஒன்பதாம் பார்வையில்...
உன் காதலன் ஆனேன்
பத்தாம் பார்வையில்...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (27-May-16, 5:58 pm)
Tanglish : paththu parvai
பார்வை : 85

மேலே