ஈரம் நின்ற கண்கள்

ஈரம் நின்ற
கண்களில்....ஏனோ
உந்தன்
தூரம் தந்த
துயரம்
இவனைக்
கொன்று தின்றது......!!

இம்சை தரும்
இந்த
நிமிஷம்....
மட்டும் அல்ல.....
நீயில்லாத
ஒவ்வொரு நொடியும்
எந்தன்
உயிர் நாடி.....உன்னைத்
தேடும்.....!!

இதயம்
இங்கே
இதமாய் இல்லை....
நீ இல்லாத
நாளில்..... இவனுக்கு
உதயமே
இல்லை......!!

உன்னை
நேசிக்கவும்
உயிராய்
சுவாசிக்கவும்
இந்த
உலகை மறந்து
உன்னையே
உலகமாய்
வாழும்
மாயம் இன்று
ஆறாத
காயமாய்
என்னுள்ளே......!!

எழுதியவர் : thampu (28-May-16, 3:08 am)
Tanglish : eeram ninra kangal
பார்வை : 151

மேலே