நேற்று, இன்று
நேற்று ...
தமிழனின்
வாழ்வுக்கடலிலிருந்து
திராவிட உப்பை பிரித்து விட
முயற்சி செய்த மாற்று கட்சிகள்
அந்த கடலின் ஆழத்தில்
காணாது போனார்கள்...
இன்று ....
கிணற்றில் விழுந்த நிலவை
வாளியில் எடுத்துக் கொண்டிருப்பவனை
கவிஞனென்று சிலரும்
கிறுக்கனென்று பலரும்
அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்....!