எல்லாம் தெய்வச்செயல்
வந்தாருங்குடித்தான்••• பார்க்கப்போனால் அந்த ஊரில் குடி ஏறி இருக்கும் எல்லாருமே•••
அவுங்க ஒவ்வொருத் தரையும் அவுங்க எந்த ஊரைவிட்டு இந்த ஊருக்கு வந்து குடி ஏறினாங்களோ அந்தந்த ஊர் பேரை சொல்லி தான் கூப்பிட்டுக்கொள்ளுவது வழக்கம்••
அப்படிதான் மாணிக்கமும் வந்து இந்த ஊர்ல குடி ஏறினார்,
வீட்டுக்கு வாடகை, மின்சார பில்லு, தண்ணி பில்லு, இவையெல்லவற்றையும் சமாளிச்சா கையில ஒன்னும் தங்குவதில்லை இந்த ரோதனையில் இருந்து விடுபட வாடகை வீட்டவிட்டு, தான் சொந்தமா ஒரு ஆறு சென்ட் இடம் வாங்கினார் தனக்குன்னு ஒரு புது வீட்ட கட்டிக்க•••
அந்த இடத்தை மாணிக்கத்துக்கு விற்றவறோட தாய் மாமன் மன்னாரு குருக்கிட்டு•••
"அந்த இடத்தை எனக்கு கொடுத்திருந்தா நான் அதுக்கு உண்டான பணத்த கொடுத்திருக்க மாட்டேனா..? நம்ம சொந்த பந்தங்கள கேக்காம அடுத்த கைக்கு நீ எப்படி கொடுக்கலாம் " என்றார்
ஒன்னுக்குள்ள ஒன்னு நமக்குள்ள என்ன வெலையபத்தி பேசிக்கிட்டும்பீங்க, உங்ககிட்ட சொல்லியிருந்தா நான் எதிர்பார்த்த பணம் எனக்கு கிடைச்சி இருக்காதே யாரு எவருன்னு இடத்தை எழுதிக்கிட்டு வெறும் கையாகூட அனுப்பியிருக்கலாம் ஆனா எனக்கு பணம் அவசரமா தேவைபட்டதால கொடுக்கவேண்டி
வந்தது மாயவன் இருக்கிற நிலவரத்த புட்டு புட்டு விலாவரியா சொன்னார்
மன்னாருக்கு கோவம் பொத்துக்கிட்டு வர அடே அப்போ நான் பிச்சக்காரனா இல்ல ஏமாத்துக்காரனா இடத்தை எழுதிக்கிட்டு உன்ன வெரும் கையோட அனுப்ப ••••
ஐயா இடமும் வேணாம் ஒன்னும் வேணாம், பணத்தை திருப்பி கொடுத்துடுங்க இடத்தை நீங்களே வச்சிக்கோங்க, உங்களுக்குள்ள ஏன் மனவருத்தம் என்று மாணிக்கம் மனசு உடைஞ்சி சொன்னார்
இடத்தை மாணிக்கத்திற்கு கொடுத்தவருக்கு முகம் மாறிப்போச்சி கடுப்பா எழுந்து நின்னு•••
இதோ பாருங்க "அது என்னோட இடம் என் இஷடப்படி யாருக்கு வேணுமுன்னாலும் விப்பேன், அதை கேக்க யாருக்கும் உரிமை கெடையாது " ன்னு சொன்னது தான்
அவரோட தாய்மாமன் மன்னாரு வெளவெளத்து கப்புசிப்புன்னு ஆயிட்டாரு
இதற்கெல்லாம் மூலகாரணம் என்ன வென்றால் அந்த இடம் ரோட்டு ஓரமா இருப்பதுதான் என்று தெறிய வந்தது
கொஞ்ச நாள் போனா நல்ல விலையில விக்கலாம் இல்லேன்னா ஒரு கடையகிடைய கட்டி வாடகைக்கு விட்டு சம்பாதிக்கலாம்
அவர்களுக்குள் குசுகுசுன்னு பேசிக்கொண்டதற்கு பின் ஒரு முடிவுக்கு வந்தார்கள்
" தம்பி மாணிக்கம் நீ மட்டும் யாரு எவுரு இந்த ஊர்ல பொண்ணெடுத்து இந்த ஊர்லேயே குடியேறுவதிலே சந்தோஷம்•••
பொண்ணு யாரு எங்க வீட்டு பொண்ணு அதுக்கு போயி நாங்க இல்லே•••ன்னா••• அதுல மனுஷ தன்மையே இல்ல நீ ஒன்னு பண்ணு
ஆறு சென்ட் இடம் என்னோடது இருக்கு அதை உனக்கு எழுதி கொடுக்கிறேன், உன்பேர்ல இருக்கிறத எனக்கு எழுதிக்கொடுத்திடு என்ன சரி தானே என்றார் மன்னாரு
ஆஹா சுத்தி வளைச்சி சொட்டேரி மொட்டு போடற மாதிரியில்ல தெறியிது சரி என்ன தான் நடந்தாலும் நடக்கட்டும் அதுலேயிம் ஒரு நண்மை இல்லாமலா போயிடும் மனதுக்குள் நினைத்துக்கொண்டு
" எப்படியோ செய்யிங்கோ•••" என்றான் மாணிக்கம்.
ஒவ்வொரு அரிசியிலேயும் எழுதப்பட்டிருக்கிறது அதை உண்ணப்போகிறவன் பெயர்ன்னு சொல்ல கேள்விபட்டு இருக்கேன்
அதப்போல எனக்குன்னு இருந்தா அது எனக்கு கிடைச்சிடும் கவலையவிடு இதுல யார் குறுக்கே புகுந்து கெடுக்க முடியாது என்ற நம்பிக்கை மாணிக்கத்துள் இருந்து தைரியபடுத்தியது
பிரச்சனை முடிஞ்சிப்போச்சி என்றான் மன்னாரு
ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணிக்கிட்டாச்சி
திடுபுடுன்னு கடகால போட்டுக்கொண்டான் மாணிக்கம்
மூனு மாசம் கழிச்சி திபுதிபுன்னு கையில கோடாளியும், கொடுவளுமா, கூட டீசல்ல ஓடக்கூடிய மரம் அறுக்கிற ரம்பத்தோட ஒரு ஜீப்ல வந்து இறங்கினாங்க ஒரு அஞ்சி ஆறு பேரு
மாணிக்கம் விட்டுக்கொடுத்த இடத்தில ஒரு இரண்டு சென்ட் அளவுக்கு அங்க இருந்த மரம் செடி கொடிகள வெட்டினாங்க
மன்னாருக்கு விசயம் தெறிஞ்சி ஓடிவந்து என்னான்னு கேட்க
இது ஹை பவர் லைன், மரம் செடி வைக்கக்கூடாது அது மட்டுமில்ல வீடும் கட்டக்கூடாது அதுக்கு கட்டுப்படாதவங்களுக்கு
அபராதம் போடப்படும் வழக்கு போடப்பட்டு உள்ள தள்றதுக்கும் சட்டத்தில இடம் இருக்கு என்றதுதான்
மன்னாரு தலையில கையை வச்சவரு வச்சவருதான் விவரம் தெறியாம யாரையும் ஆராய்ஞ்சி அறியாம என்னோட தலகனம் என்னை தரமட்டமா ஆக்கிடுச்சி அதிக ஆசை அதிக நஷ்டம் என்பதை தெளிவா தெறிய வச்சிட்டான் மேலகீரவன்
வெவஸ்த கெட்ட மனுஷன் வெவரங்கெட்ட மனுஷன் தானே ஆப்பு சீவி தனக்குத்தானே அடிச்சிக்கிற மனுஷன என்னான்னு சொல்றது அவரது மனைவியோட புலம்பல்
அடியே...மறுமவளே....இனி இவன நம்பாதீங்க
...மீதிசோதி..இருக்கிறத .....எம்பேரப்புள்ளங்க பேர்ல எழுது இல்லேன்னா அதையும் ஏடாகோடமா ஏதாவது பண்ணி இருக்கிறதையும் ஒன்னுமில்லாம பண்ணிடப்போறான் தாயோட புலம்பல்
புதுச்சேரியிலேயே செட்டில் ஆயிட்டேன் வாடக கட்டி மாளல அங்கே என் தகுதிக்கேற்ப ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டிக்கிட்டு இருக்கிறதனால பணம் அவசரமா தேவைப்டது•••
மாவன் எடுத்துச்சொல்ல
அப்பா நான் உன்ன ஒன்னும் சொல்லவர்லப்பா உன் வயித்து வலிக்கு நீ மருந்து திண்ண...... மன்னாரோட தாய்
கொஞ்ச நாள் கழித்து மாணிக்கமும் மாயவனும் சந்திச்சிக்கிடாங்க
மாணிக்கம்••• இந்த HP விஷயம் எனக்கும் •••தெறியாது,
பிறத்தியாருக்கு தோண்டும் குழி தானே விழக்கூடியதாக்கிட்டான் மொத்தத்தில என்னை நீங்கதான் காப்பாத்தினீங்க
நீங்க மட்டும் இதில்
தலையிடலேன்னா அது என் தலையில விழுந்திருக்கும்,
நான் பிழத்துக் கொண்டேன்
அவரும் இதை தெறிஞ்சி பண்ணல அதனால அவரை வருந்தியும் பிரயோசனம் இல்ல ஆனாலும் அவர் கொஞ்சம் கையிருப்புக்காரர் அவருக்கு இது ஒன்னும் இழப்பா தெறியாது
நாம ரண்டுபேருக்கும் அது இல்ல அதனால பெரிய விஷயமா தோணுது
உங்க நல்ல நேரம் என்னையும் காப்பாத்திடுச்சி
சார் என் தலைக்கு வந்த ஆபத்த நீங்க காப்பாத்தினீங்க உங்க தலைக்கு வந்த ஆபத்த அந்த ஆண்டவன் காப்பாத்திட்டான்
நம்ம இரண்டுபேருக்கும் குறிவச்சவன் தலைய யார் காப்பாத்துவான்
எல்லாம் தெய்வச்செயல்