வாழ்ந்து பார் அனுபவம் ருசிக்கும்
ஒருவரின் வாழ்க்கையும், வாழ்வதும்
ஒன்றும் அவ்வளவு எளிதல்ல!
நடைபெறும் காரியங்கள் யாவும்
காரணமின்றி நிகழ்வதுமல்ல!
சூரிய சந்திரன்
சுழல்வதும் அவ்வாறே!
மரங்களின் இலைகள்
உதிர்வதும், துளிர்ப்பதும்;
கோடையின் வெப்பமும்,
குளிர்காலப் பனியும்;
இயற்கையின்
சுழற்சியே!
காலங்களின்
…..மாற்றமும், சுழற்சியும்
ஞாலம் தோன்றியது
…..முதல் அவ்வாறே!
அதுபோல
வாழ்வின் இன்பமும், துன்பமும்;
வாழ்க்கையின் சுழற்சியே!
வாழ்ந்து பார்! அனுபவம் ருசிக்கும்!