கால நிலை மாற்றம்
அற்றை திங்கள்
அந்திமந்தாரையில்
அன்றிலின்
கவின் சாளரத்தில்
விழி புதைத்து
இருதய கமலம்
தாழிட்டது பிரபஞ்சத்தை
யாழ் மீட்டியது
மேக திரள்கள்
மௌன ராகம்
எத்தனிக்கும்
தளிரும்
பூ மழை பொழிய
வாடை வாசல் வர
பொய்கை எம் நாதமும்
பண்ணையும்
இதய அலைவரிசையில்
ஒன்றிணைக்க
எழில் நிலவும்
ஏழு ஸ்வரம் படிக்க
இறையின் மடியில் இணைந்தேனடி
இற்றை திங்கள்
காரிருள் சூழ
சூறாவளி இதயத்தில் கலக்க
நொடிகள்
நரம்பை வெடிக்க
இதயம் புடைக்க
கொற்றை மலர்
உடலை
குடிக்க
உயிர் வரும் வேளை
இருதயம் துடித்திடுமா?
அவர் மேனி தொழுதிடுமா?
எம்மேனியை
அற்றை திங்கள் நடந்த ராகம் மீட்டி மடியில் வாங்கிக்கொள்வாரா
அதில் உடல் பேசிடுமா?
இல்லை உயிர் மட்டும்
சோக கீதம் பாடிடுமோ?
சொல்லடி தோழி.....
என் மேனி வலிக்குதடி
இருதயம் வெடிக்குதடி
நாதனை நான் காண்பேனா?
தோழி
தென்றல் வீசும் திசை பார்க்கின்றேன்
மரம் நான்
நிலத்தில் அவர் இன்றி
நாதி அற்று வீழ்வதா!
வந்துவிடு நாதா
வென்றுவிடு என்னை
கொண்டுபோய்விடு உன்னில்
~ பிரபாவதி வீரமுத்து