நட்பிலா காதலிலா
அடியே
பாட்டி கதைக்கு கூட
விடை உண்டு ,
விக்ரமாதித்யன்
தோளில் கிடக்கும்
வேதாளத்திற்கு கூட
முடிவு உண்டு ,
நமக்குள் ஏன்
இந்த மௌனம் ...,,,
தழுவி நின்றால்
தென்றலும் தீயகுமா?
தள்ளி நின்றால்
தீயும் தென்றல் ஆகுமா?
விந்தையடி உன் கூத்து!!
நட்புதானே
நீயும் நானும்
படுத்துறங்கிய
படித்துறை !
நட்பின் பரிமாணம் தானே
காதலின் அடித்துறை!
விழுந்து கிடந்த போது
விடுதலை என உன்
சிரிப்பு ...
நட்பிலா? காதலிலா?
அரண்மனை அந்தபுரத்தை
ராணிகள் அழகுபடுத்த
அதையும் மீறி
அங்கே வலை கட்டும்
சிலந்தியின் தைரியம்
எனக்குள் .....
அதிகம் பேசினால்
அல்லல் பட்டு விடுவேனோ
என பயந்து கிடந்தேன் ....
நட்புக்கும் காதலுக்கும்
உனக்கு கடைசிவரை
அர்த்தமே புரியவில்லை ?
காதல் இருக்கிறதா ?
இல்லையா ?
அடைகுறிக்குள் நான் .....
நிலவின் அமாவாசையை
ஏற்காதவன் நான் ...
நீ நிலவாக இருக்கும் போது
அமாவாசை எப்படி வரும் .....
மலரின் மரணத்தை
உறுதி படுத்தாதவன்
நான் ....
பூவென நீ நிற்கும்போது
மலருக்கு ஏதடி மரணம் .....?
மிருகம் போன்ற நான்
உன் விழியில்
உன் மொழியில்
மயங்கியது காதலில் தானே ...!
ஆர்ப்பரிக்கும் கடல் கூட
அடிகடி தாகம் கொண்டு
முகிலின் முலை பாலை
உண்டு களிக்கும்....
நிறை கொண்ட கடலுக்கே
குறை எனில்
குறை கொண்ட என்னிடம்
நீ நிறை தேடுவது
வேடிக்கை ....!
கலை உடைத்து
சிலை வடித்து
உயிர் தரும் வேளையில்
உளியை யார்
உன்னிடம் இருந்து பறித்தது ...?
நான் புத்தன் அல்ல
நான் காந்தியும் அல்ல
நான் மனிதனும் அல்ல -உனக்கு
மிருகமும் அல்ல .....
இந்து சாத்திரத்தில்
மனிதனின் ஈடேறா ஆசைகள்
மறு ஜென்மத்தில்
முதலாகும் என்ற
தத்துவம் உண்டு ....
நான் மரணத்தை
தேடி விட்டேன்
இறக்கும் போது
உன்னை நினைத்தால்
மறு ஜென்மத்தில்
நீ எனது ஆவாய் அல்லவா ...?
போய் வருகிறேன்
நட்பு என்ற காதலே
போய் வருகிறேன் ....?
மறு ஜென்மத்தில்
என் காதல்
உனக்கு புரியும் என்ற
நினைப்போடு ......
நாஞ்சில் இன்பா
9566274503