இது காமம் அல்ல

என் சுவாசமே
உணர்வுகளின் ஸ்பரிசம்
நினைவுகளாக ...
உறவை சொல்ல
காதல் இங்கே ஒரு
குயில் பாட்டு ....

கனிந்த பழங்கள்
காய்த்து கிடக்கும்
மா மரத்தில்
சுவை தேடி
அணில் வருவது போல
உன் கன்னம் தேடி
என் பயணம் ......
மயங்க ...மயக்க


உன் நெற்றியில் விழும்
ஒற்றை மூடியும்
எங்கோ பரதம்
கற்று இருக்க வேண்டும்
என்னை பார்த்து
அபிநயம் கொள்ள .
அடங்கிய ஆண்மை
விழிக்கிறது ....
அந்த நினைவில்
தவிக்கிறது.....


காலை கதிரவன்
மேனி மினுக்கி
தன் வண்ண அழகை
கட்டும் போது
கட்டிலில் உன்
முகம் தானே
அழகாகிறது ...
இரவின் நாடகத்தை
பறை சாற்ற...!

வெட்கத்தை நீ காட்டி
விலகிய ஆடைகளை
சரி செய்யும் போது
மறந்த நாடகம்
மீண்டும் எழுகிறது ...
காதலுக்கு முடிவே இல்லையாம் ....

கன்னத்தில் இச்ச் என்ற
ஓசை அழுத்தமாக விழ
நாடி நரம்புகளில்
மீண்டும் ஒரு மின்னல் ...
காதலில் குழந்தையாய ..
விளையாட்டை ஆரம்பிக்கிறோம் .....

கொட்டிய சிவப்பு
முத்துகளின் மீது
வைரத்தின் ஒளி பட்டு
வானவில் தோன்றுவது போல ...
உன் இதழின் அபிநயம்
காட்டும்
அந்த அழகு
ஆயிரம் இலக்கியங்கள்
சொல்ல அற்புத கவிதை ...
நமது அடுத்த கதையின்
தொடக்கம் ......

விழி அசைத்து
நான் விழ்த்து விட்டேனா
என ஒர கண்ணில் நீ பார்க்க
சிறு துன்பம் போன்ற
இன்பம் மீண்டும் வா என
அழைக்கும்

இரவின் மயக்கம்
விடியலில் என்றால்
கசந்திடதான் தோன்றுமோ
கரும்பில் எது என்றாலும்
சுவைப்பதில் தவறு இல்லை

மனைவி காதலி ஆனால்
எப்போதும் காதல்
இனிமையே .....
என்றும் இளமையே ....


நாஞ்சில் இன்பா
9566274503

எழுதியவர் : நாஞ்சில் இன்பா (1-Jun-16, 9:24 am)
Tanglish : ithu kamam alla
பார்வை : 719

மேலே