கண் கண்ட கனவு
இருக்கமான இரவுல்
நடுக்கமான கனவு
ஒன்று
கனவுக்குள் கலைந்து
போன கனவுகள்
தொடர்கின்றது
கனவுக்குள் எழுந்து
பார்த்தால் மிதந்து
கொண்டு
பயணிக்கிறேன் என்னை
உணர்ந்து கொள்ளும்
இடத்து
சற்று சிந்தித்தபடி
உள் நுழைந்தேன்
நான் நினைத்தவை
நடந்து கொண்டு
இருக்கின்றன
காலங்கள் என்
கால்களை கழுவுகின்றன
சோகங்களும் தாகங்களாய்
மாறுகின்ற
மறுபக்கமாய் தெரிகின்றது
என் பூர்வஜென்மக் கதை
உணர்ந்தேன் கனவிலும்
நுழையாத வழிகளும்
உண்டு அழியாத
வலிகளை உணர்த்தும்படி
உலகம் சுற்றும்
காட்சி
என்ன அழகு
என்றது என்
மனசாட்சி
தூசிகள் கூட
தூய்மையாய் உள்ளது
இன்பங்களாய்
பூத்தபடி
நிலவும் கூட
கனவு காணுகின்றது
எனக்கும் உறங்க
முடியும் என்று
ஓசைகள் எதும்
ஒழிக்காது
எம்மை அழிக்கின்ற அளவுக்கு
தீகள் கூட
சித்தரிக்கின்றன சிலையாக
பிறந்த மானிடங்களை
கண்கள் கூறுகின்றன
இது கற்பனை
என்று
விழித்து பார்த்தேன்
அனைத்தும் என்
முன்னே
புறிந்து கொண்டேன்
நான் கண்டது
கனவு அல்ல
என்று
கவிஞர் அஜ்மல்கான்
பசறடிச்சேனை பொத்துவில்