அகநானூறு புறநானூறு...
அகநானூறு புறநானூறு
உன் புறத்தில் நானூறு அவலங்கள்,
அவலங்களை அகற்ற நினைக்காது,
அவலங்களை மறக்க நினைக்கிறாய்,
மறக்க நினைத்து அகத்தின் - அகத்தே,
நானூறை செலுத்தி புறநானூறு அவலங்களை,
மறப்பதாய் எண்ணி மடயனாகிறாய் நானூறு நிமிட சொர்கத்தில்,
விழித்தவுடன் உணர்வாய் புறநானூறு அவலங்கள் அங்கேயே இருப்பதை,
அகத்தில் சென்ற நானூறும் புறநானூறு அவலங்களைக் கண்டு அரண்டு ஓடிவிட்டதை,
மறக்க நினைக்காதே, அவலங்களை அகற்ற நினை, அகமும் புறமும் வளம்பெறும் வாழ்வினிலே...