டெடி பியர்

என் கோபங்களில்
முதல் அடி ...
உனக்கு தான்...!
கோபத்தின் உன்னை
தூக்கி எறிந்தாலும்
கூட
உன்னுடன் மட்டும்
ஏனோ கோபங்கள்
வருவதே இல்லையே...?
இரண்டொரு நொடிகளில்
உன்னை அணைத்து
கொஞ்சிவிடுகிறேன்....!
உன் கள்ளங்கபடமற்ற கண்களின்
பார்வையாலே...!
நீயோ மறுப்பேதும்
இல்லாது சற்று
இறுக்கமாகவே
அணைத்துக்கொள்கிறாயே...!!
-கீதா பரமன்