அந்த உன் விளையாட்டில்•••

உன் ஜென்மத்தை
என் ஜென்மம்
குறுகுறுக்க பார்க்கணும் என்று என்றுமே ஆசைப்பட்டதில்லை
இருள் மண்டி இருக்கும் உள்ளே உள்ள உன் உள்ளத்தை சிறுநாழிகையும்
மறந்ததாய் ஞாபகமில்லை
அப்படியானவன் ஆயினும் என்னை
தவிர்த்து எல்லோரிடத்தும் சரளமாக பாடுகிறாய் ஆடுகிறாய்
பேசுகிறாய் பழகுகிறாய் சிரிக்கிறாய் அவற்றையெல்லாம் நான் பார்க்கையில் உன்மேல்
சிறு வெறுப்பு பொறாமை பொச்சரிப்பு நச்சரிப்பு வந்ததாக எனக்கு ஞாபகம் இல்லை
நீ யாருடனும் பேசு பழகு விளையாடு அவர்களோடு நீ எங்கு வேண்டுமானாலும் போகலாம் வரலாம் மூலஸ்தானம் முதற்கொண்டு
மாதரசியின் கார்குழலிலும் அவள் கன்னிக்கழியப் போகும் மஞ்சத்திலும் மணமணக்கலாம் மலராளே
அந்த உன் விளையாட்டில் என்னையும் சேர்த்துக் கொள்ள மாட்டாயா•••?