என் பாசம் புரியலையா

நீ கேட்காமலேயே
உனக்கு யாவையும் தருவதால் தான்
என்னவோ
என் பாசம் உனக்கு தெரியலையா!?

உனை அலையவிடாமல்
உன்னையே சுற்றி சுற்றி
ஒரு நாய்க்குட்டி போல் உன் பின்னாலே வருவதால் தான்
(என்னவோ)
என் நேசம் உனக்கு புரியலையா!?


உனக்காக
பதறும் நெஞ்சம்
என்று ஒன்றிருந்தால்
அது நானாக தான் இருப்பேன்
அது உனக்கும் தெரியும்
ஆனால் ஏனோ ஏற்க மறுக்கின்றாய்

உன்னிடம் நான் கேட்பதெல்லாம்
(எதிர்பார்ப்பதெல்லாம்)
என்ன?

உன் பணமா ?
உன் அங்கமா?
உன் தங்கமா?

உன் அன்பை தானே .....

அதை தர நீயோ தாமதிக்கிறாய்
தாமதம் சம்மதம் சொல்லுமோ?!
என் தலை வாங்குமோ!(இல்லை சமாதி கட்டுமோ?)
காலம் தான் பதில் சொல்லும்


**************************

உனக்காக தேடி தேடி அலைந்து திரிந்து
வாங்கி வந்த பொருளை
உன்னிடம் நீட்டினேன்

நீ கூறினாய்
"நான் செத்தா சுவத்ல வச்சி படச்சிடுனு"
பொருளை சரி
என் உயிரை எங்கு வைத்து படைப்பது

நீ சாகும் வரை
நான் வாழ்வேன் என்று நினைத்தாயா.....?

நீயும் நானும் மாற்றிக்கொள்ள தான் மாலை
நீ மட்டும் அணிய அல்ல.
அப்படி ஒன்று நிகழுமேயானால்

நாம் சேர்ந்தே அணிவோம் மாலை
உன்னோடு சேர்ந்து வாழத்தான் முடியவில்லை
சேர்ந்து
சாக நான் இருக்கிறேன்

என் கல்லறையில்
உன் பெயரை எழுத சொல்லுவேன்
காரணம் நான் உன் பெயரை(யாவது) சுமந்திட.....

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Jun-16, 12:17 pm)
பார்வை : 230

மேலே