மாமன் மகள்
மனதில் ஆசையை வளர்த்துக் கொள்கிறேன்
அதையே எண்ணிக் கனவும் காண்கிறேன்!
கனவை நனவாக்கும் நம்பிக்கைக் கிணறு
சிவனார் திருக்கோயிலில் உள்ளது!
கனவு நிறைவேற வேண்டி, வேண்டி
கிணற்றுக்குள் சில்லரையை வீசுகிறேன்!
நான் விரும்புவது போல அவள் பெற்றோருக்கும்
என்னைப் பிடித்திருக்க வேண்டுமென!
கல்லூரிப் படிப்பையும் முடிக்கிறேன்
கணக்காயர் அலுவலக வேலையிலும் சேர்கிறேன்!
பெண் கேட்டு மாமன் வீடு செல்கிறேன்,
மாமனும் மாமியும் தலையசைத்து சம்மதம்!
காத்திருத்தலும், வேண்டுதலும் தரும் பரிசு
காதலுக்கு வெற்றி! வெற்றி!!