மழலையின் முயற்சி
மழலை பேசும் குழந்தை ஒன்று,
தள்ளாடியபடி நடை பழகுகிறது,
தடுக்கிக் கீழே விழவும் செய்கிறது,
விழுந்து எழவும் செய்கிறது - ஆனாலும்
நடையை நிறுத்தவில்லை!
குழந்தை எழுகிறது,
நடையைத் தொடர்கிறது,
தள்ளாடியபடி நடை பழகுகிறது,
மறுபடியும் விழுகிறது - ஆனாலும்
முயற்சியை விடுவதில்லை!