சலாவு 55கவிதைகள்

கண்மீனும் விண்மீனா ..
காதலியே என் கண்மணியா ..
என் காலை சூரியனா ..
நடு இரவு சந்திரனா ..
மொழி பேசும் பெண் கிளியா ..
வாய்மொழி என்ன தேன்மொழியா ..
பகல் நிலவு காணலாமா ..
பகல் கனவு பலிக்கலாமா ..
காத்திருப்பு தொடர்கதையா ..
காலங்களும் பெரும் சுமையா ..
பறிதவிப்பு நெஞ்சம் தானா ..
உள்ளத்தில் உன் சிந்தை தானா ..
எனை செதுக்கினாயே புது கவியா ..
நானும் படிக்கிறேனே பல கவியா ..
.
என் எதுகையினை செதுக்கியே ..
மோனை உனை வடிக்கிறேன் ..
.
சொல்லென்ற உளி எடுத்து ..
உன் விழியின் மொழி எடுத்து ..
பெண்ணே உன்னை வடிக்கின்றேன் ..
என் காதல் வரிகளிலே ..
.....................................................................
உன் விழியின் மொழியில் ..
என் காதலின் தேடல் ..
.......................................................................:-சலா,

எழுதியவர் : (7-Jun-16, 3:06 am)
பார்வை : 65

மேலே