விழிகளில்
மை
இருட்டு வேளை
மயிலாடும் சோலை
மின்மினிகள்
கூட்டம் செல்லக் கண்டேன்......
வெள்ளைக் கலந்த
வெளிர் பச்சை வண்ண
சேலையில்
ஒரு தேவதை வந்தாள்......
முந்தானை
முகம் மூடியிருக்க
மேகம் வராத
முழு நிலவு அவள்......
வீசிய
காற்றில் அது
விலகிப் பறக்க
கண்கள் கூசும்
மின்னொளி வதனம் அது......
சில நொடிகளிலே
கடலில்
விழுந்த மழைத் துளியாய்
மாயமாய்
மறைந்தும் விட்டாள்......
சற்று நேரம்
இருள் மட்டுமே நிலவியது...
திடிரென
ஒரு வெளிச்சம்
அங்குமிங்கும்
உலவியது......
பார்க்கும்
திசை எங்கும்
பாவையே ஓடுகிறாள்...
நானும்
துரத்தி வேகம் ஓடுகிறேன்
கால்கள்
நகரவே இல்லை......
ஓடியதில்
களைத்து
மேல் மூச்சு கீழ் மூச்சு
வாங்கிதான் நின்றேன்...
தேகமெங்கும்
வியர்வைத் துளிகள்
கொட்டிக் கொண்டிருந்தது......
அவள்
தொட்டுவிடும்
தூரம் தான் நிற்கிறாள்...
கை நீட்டி
தொடும் போது நான்
கிழே விழுந்து விட்டேன்...
கலைந்தது
விழிகளில் கனவு ......