என்றும் நீ என்னோடுதான்

என்றும் நீ என்னோடுதான்!
என்னுயிரின் மேலாக
இருப்பவளே ! இயற்றமிழாய்
புன்னகைக்கும் எழிலணங்கே !
புகழொளிக்கும் சீர்விளக்கே !
மன்னுபுகழ் தொன்தமிழே !
மணம்பரப்பும் சந்தனமே !
இன்னமுதப் பாவளிக்கும்
என்றும் நீ என்னோடுதான் !

எழுதியவர் : இராம்பாக்கம்.கவிஞர்.தன.கன (7-Jun-16, 6:59 am)
பார்வை : 147

மேலே