திருமணம் மற்றும் திருமண வாழ்த்துக் கவிதைகள் பக்கம் 01 --முஹம்மத் ஸர்பான்

இரு மனங்கள் ஒன்றாகி
வாழும் எண்ணம் அன்பாகி
உயிரின் மொழி காதலாகி
புரிந்திடும் வார்த்தைகள் திருமணம்

தினமும் கூந்தலில் பூக்களும்
பூத்திடும்;கண்களின் வீச்சில்
வெட்கமும் சிக்கிக் கொள்ளும்
நொடிகளில்
விரல்களும் மோதிரமாகும்
இரு உயிர்களும் உணர்வாகும்
வாழ்வின் மறுதிசை திருமணம்

கடலின் அலைகள் போல
ஆசையும் பாசமும் அசைவாகும்
பூவின் வாசணை போல
கோபத்திலும் பொறுமை விசையாகும்
அசைவும் விசையும் நிறைந்தது காதல்
அதை புரிய வைப்பது திருமணம்

ஏதோ நகரும் நாட்களுக்காய்
ஏங்கி வாழும் இரு இதயங்கள்
நகரும் நொடிகளைக் கூட
சேமித்து ஒற்றை நோக்கத்துக்காய்
இணைந்து வாழும் சுவாசம் திருமணம்

வெட்கங்கள் ஊமை மொழியாகும்
ஆசைகள் உணர்வின் மொழியாகும்
பாஷைகள் இதழின் மொழியாகும்
காதல் திருமணத்தின் மொழியாகும்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (7-Jun-16, 4:44 pm)
பார்வை : 713

மேலே