வேதனை
#வேதனை....
சாதனைகள் சோதனைகள்
சுமந்ததாலே வந்திருக்கிறது
இங்கே பலருக்கு_ஆனால்
அணு சோதனையால் அகிலம்
அறியப்பட்ட ஆசான்
மாணவர்களுக்கு ஆசான்
அய்யா அப்துல் கலாம்
சரிந்ததே கவிதை மேடையேறு முன்னே கண்கள் நீர் சுமந்து
கலங்கிய விழிகள் ஏராளம்
மலர்க்கொத்து கொத்து கொடுத்த கைகளெல்லாம்
மனதில் சொல்லமுடியாத வேதனையோடு கையில்
மலர் வளையத்தோடு
பூங்கொத்து பெற வேண்டியவர்
புன்னகை மாறாமல் பேழையில்
கூடியிருந்த மக்கள் மனங்களோ
வல்லரசு கனவு மடிந்து போன வேதனையில்...
.சுசிமணாளன்....9791334346