காதல் ஒரு அரசியல் தான்
எர்மோன் மலைகளில்
நாட்டியம் ஆடும்
ஆடுகளின் ரோமத்தின்
மென்மை
உன் கூந்தல் .....
லெபனான் நாட்டு
பவளத்தின்
பிரதிபலிப்பு
உன் புன்னகை .....
உன் நாவின்
அடிசுவையில்
தேனும்-சுவையும்
ஊறிடும் அதிசயம் ...
அழகினால்
ஆண்டவனையே
விழ்த்திய
கிளியோப ட்டரா
உன் சகோதரி .....
யானின் இசை
இளையராஜாவின் மெட்டு
உன் குரல் கேட்பதற்கு
முன் இனிமை ...
ஆயிரம் ஆண்டுகள்
அனு தினம்
உன்னை எழுதினால்
என் தமிழ்
தோற்று போகும் ...
பனிரெண்டு ஆண்டுக்கு
ஒரு முறை குறிஞ்சி ...
ரெண்டாயிரம் வருடத்துக்கு
நீ .....
நிலவினை தேடிய
ஆம்ஸ்ட்ராங் கூட
முதலில் உன்னை
கண்டு இருந்தால்
உன் விழியை
நிலவு என்று
அறிவித்திருப்பான் .....
பிரம்மன் ஆயிரம்
கணணி வைத்து
படைத்த அழகு
நீ......
என் கவியே
உன் நடையை
மெதுவாகி கொள் ..
உன் அசைவில்
தொலைவது
நான் மட்டும் அல்ல
அன்னமும் தான்....
வானத்தில்
பால் கொண்டு போகும்
மேக ஊர்திகள்
தென்றல் இடம்
எரிபொருள் நிரப்புவது போல
என் கவி
உன்னிடம் .....
உன் முந்தானை
என்னை வா
என்று அழைக்க ...
உன் விழி கட்டும்
நாணம்
வைரமுத்துவின்
கரிசல் காட்டு காவியம் ...
காதலியே
ஒரு முறை
காதலை சொல்லு
ஒபமாவையும்
வென்று காட்டுவேன்..
காதல் ஒரு
அரசியல் தான்
போய்தான் இங்கு அழகு
ஆனால்
நீ மட்டும் எப்படி
மெய் ஆனாய் ....
நாஞ்சில் இன்பா
9566274503