கனா காதல்
கனா மட்டும் கண்டு வந்தேன்
தேவதை உனை என்னுள் கொண்டு வந்தேன்
கோட்டை ஒன்று கட்டி வைத்தேன்
உனை ராணியாக்கி ஆள வைத்தேன்
காலம் கடந்த காதலிலும்
ஊடலிலும் எப்பொழுதும் திளைத்திருந்தேன்
கலையாத மேக கூட்டமாய்
உந்தன் மோகத்தினில் மிதந்திருந்தேன்
மிதந்திருந்த காலமெல்லாம்
நகர்ந்தடி மின்னொளியாய்
மின்னோளியாய் இருந்த்ததனால்
பிரிவெனும் இடியோன்றை இறக்கி விட்டாய்
இடிந்து போன கோட்டையிலே
கருகித்தான் போனதடி
என் கனா காதலும் தான்!!!!!