பெருந்தலைவர் காமராசர்
எளிமையின் பிறப்பிடமாய்
ஏழ்மையிலும் நேர்மையாய்
பேச்சிலே இனிமையாய்
பேரன்பு கொண்டவராய்
பட்டறிவு பெற்றவராய்
படிக்காத மேதையாய்
கல்விக்குப் புகலிடமாய்
கற்போருக்கு வழித்துணையாய்
அரசனுக்கு அரசனாய்
அன்புள்ளம் படைத்தவராய்
இறைவனின் இருப்பிடமாய்
இல்வாழ்வைத் துறந்தவராய்
தாய்க்குப் பெருமையாய்
பெருந்தலைவர் காமராசர் !