சந்தோசமாயிரு
மனம் கசிந்து அளவு கடந்த நிமிடங்களில்
மேகங்களை தூது அனுப்பிவைத்திருந்தேன்.
அது உன்னிடத்தில் மழையாய் விழுந்து
என் மனக்கட்டளையினை உரைத்திருக்கும்.
ஆனாலும் பதில் பெறப்பட்ட முகில்கள்
உன் அழுகுரல்களியே முணுமுணுக்கின்றன.
இந்த உன் நிலை மாற என் மனம்
என்ன நிலை கொள்ளவேண்டுமென்று
விரும்புகின்றாய் புரியும்படிசொல்.
என் விருப்பம் இங்கு முக்கியமில்லை.
உன் மகிழ்ச்சி முகம் காணவே
மலர் மனம் விதைத்திருக்கிறேன்.
அங்கு நாம் கண்டு களித்திருந்த
நகர நன்மைகள் குறித்த நலம்
நினைத்து மனம் நகுகிறேன்.