ஒரு நிமிடக்கதை - சுருக்கமா ஒரு வரிலதான் சொல்லணும்
ஸ்கூல்ல ஒரு தடவ
டீச்சர்: "வருண் நீ பெரியவனான பின்னாடி என்னவாக ஆசைப்படறே?"
வருண்: "டீச்சர், நான் பெரிய பணக்காரனா ஆக ஆசைப்படறேன்....
ஒவ்வொரு பெரிய நகரத்திலும் என்னோட பிசினஸ் நடக்கணும். எல்லா மாநில தலைநகரிலும் சொந்தமா... விலையுயர்ந்த பங்களா வாங்கணும்... எங்க போனாலும்... பிளைட்ல தான் போகணும்.... தங்கறதேல்லாம் 5 ஸ்டார் ஹோட்டல்ல தங்கணும்....
எனக்கு சேவகம் செய்ய எப்போதும் பத்து வேலையாட்கள் கூடவே இருக்கணும்.... உலகத்துலயே விலைமதிப்பில்லாத வைரக்கல்லு என்கிட்டே இருக்கணும்.
டீச்சர்: "போதும் வருண்! ஸ்டூடண்ட்ஸ், இனிமே யாரும் இவ்ளோ நீளமா... சொல்லக்கூடாது. சுருக்கமா ஒரு வரிலதான் சொல்லணும்...
ஓகே...
பூமிகா, நீ சொல்லு.... நீ என்னவா... ஆகணும்னு ஆசைப்படறே!?
In
பூமிகா: "வருணுக்கு பொண்டாட்டியாக!!!"