சொல்லா காதல்

அருகில் இருக்கும்
நேரமெல்லாம்
பார்த்துக் கொண்டே
இருக்க நினைத்தேன் !

நகரும் நொடி
பொழுதும்
உன்னோடு கழிக்க
நினைத்தேன் !

யாரும் பார்க்காத
நேரத்தில்
சிறு துளையில்
உன்னைக் கண்டு
ரசித்தேன் !

விழிகள் காதலை
உரைக்குமென
மொழியில் உரைக்க
தவறினேன் !

நாளும் உன்னை
என்னவளாய்
எண்ணி பொழுதை
கழித்தேன் !

சொல்லா காதலெல்லாம்
தோல்விதான் போலும் !

என் காதலும்
இன்று
தோல்வி ஆனதே !

எழுதியவர் : புகழ்விழி (11-Jun-16, 10:25 pm)
Tanglish : sollaa kaadhal
பார்வை : 948

மேலே