மனதின் பயணம்

மனதின் பயணம்

-கிருஷ்ணா

"அப்பாடா... வசதியான இடம்" எனக்
கால்களை நீட்டி சோதனை செய்து
மகிழ்வுடன் புத்துணர்வும் நமக்கு தந்து
"எப்பதான் வண்டிய எடுப்பானோ??"
டிரைவரை நோக்கி நமக்குள்ளாக கேள்விகள்
கூடவே எரிச்சலையும் நம் மனம்
தந்துகொண்டிருக்கும் போது
ஜன்னல் வழியே ஜீன்ஸ் டிசர்ட்டில்
மெய்ப்பிம்பம் போன்று மங்கை சாலை கடக்க
கடக்கும் வரைகண்டு இதே
நிகழ்வு நண்பர்களுடன் என்று
கல்லூரி வாழ்விற்கு நம்மை அள்ளிப்போகும்போது
மலர்மங்கையின் சிரிப்பை நினைக்க
அது அப்படியே காதலியின்
சிரிப்பு சினுங்கல் அசைவு நடை
பார்வை விழிமொழி கோபம்
என நினைவுகளின் சங்கமத்தில் ஊற
புன்னகையினையும் உடன் தந்து
ராஜவையோ ரஹ்மானையோ மொபைலில் வரவைத்து
நான்கு வரிகளுக்கு கூட
செவியையும் மனதையும் ஒட்ட வைக்காது
தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுனரின்
வேக சவாரியில்
புல் தின்னும் பசு
வயல்களின் நடுவே தென்னை
சத்தங்களுடன் மக்கள் நெரிசல்
மரங்களை மறைத்து ஓவியமாய்
வேகமாய் நம்மை தழுவி போகும் காற்று
தன்னை கட்டும் மலை
இதன் நடுவே அப்பேருந்தில் இருவரின்
சத்தமான உரையாடல் என அனைத்தையும் கடந்து
எதிர வரும் சவ ஊர்வலம் கண்டு
கவிஞர் ஒருவரின் கவி
நம்மை சிலிர்க்க வைக்க
போதுமென கண்களும் மனமும்
சோர்வு கண்டு நித்திரையை தழுவும்.
பயணத்தில் பயணிப்பது உடல் மட்டுமல்ல.
மனமும் தான். பறவையாய்.

எழுதியவர் : krishna (13-Jun-16, 7:11 pm)
Tanglish : manathin payanam
பார்வை : 231

மேலே