இன்று புதிதாய் பிறந்தோம்
பஞ்ச பூதங்கள் ஒன்றுகூடி
ஆடிய ஆட்டமென்ன•••?
புல்லறிக்க காது கொடுத்து
கேட்ட ஓலமென்ன•••?
இந்த உயிரினங்கள் அந்த
பஞ்ச பூதங்களை அப்படி
என்னதான் செய்தனறோ
இப்படியாக பழிவாங்க...
கோள்களை ஆராய ஆகாயமதை
மாசு படுத்தியதனாலோஎரிபொருளால் புகையை வாயுவோடு
கலந்து மாசு படுத்தியதனாலோ
கண்ட கண்ட கழிவை அமிர்தமாம்
ஜலத்தோடு கலக்க விட்டதினாலோநிலத்தை குடைந்து கனிமம் எடுக்க
உரு குலைத்ததினாலோ உயிரினங் களை
தீயதனைமூலமாக்கி; அழித்து நற்ப்பெயரை
கெடுத்ததினாலோ பஞ்ச பூதங்கள்
ஒன்று கூடி உயிர்களை, உயிர்களின்
உடமைகளை ஒன்றுவிடாது கூட்டிக்கழுவி
கவிழ்த்து விட்டல்லவா நகர்ந்தது
ஆகாயம் அடங்கியதுவாயு தன் வாயை மூடியது
ஜலம் வடிந்து ஒதுங்கியது
அக்கினி அணைந்தது
நிலம் நீராடி தன்னை
துவட்டிக்கொண்டது
புதியதோர் உலகை
படைத்தது போலல்லவா
இன்று உணர முடிந்தது
அன்று கார் மேகமதைக்
கண்டுவிட்டாலோ
விவசாயிகள் மயில்
ஆட்டம் ஆடிடுவர்
இன்று கார்மேகமதை
கண்டாலே கண்களை
கசக்கிக் கொண்டனர்
அவர்கள் மட்டுமா?
அந்த சம்பவத்தை சந்தித்
தோரெல்லோருமே செத்துப்
பிழைத்ததனால் "இன்று
புதிதாய் பிறந்தோம்" என்றே
பாலகர் முதற்கொண்டு
முகங்களில் சிறு முக மலர்வை
காண முடிந்தது ....